அல்லு அர்ஜுனால் ஷங்கருக்கு புதிய சிக்கல்!? அதிர்ச்சியில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!

Prasanth Karthick

வெள்ளி, 6 டிசம்பர் 2024 (14:25 IST)

பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது அதற்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக உள்ளது. பெரும்பாலும் பெரிய ஹீரோக்களின் ரசிகர்கள் தங்களது விருப்ப ஹீரோக்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியே பார்க்க விரும்புகின்றனர்.

 

 

இதனாலேயே பெரிய ஹீரோக்களின் முதல் நாள் டிக்கெட்டுகள் வழக்கத்தை விட பல மடங்கு அதிக விலைக்கும் விற்பனையாகின்றன. இந்நிலையில் பொதுமக்களும் படம் பார்க்க வரும்போது ரசிகர்களால் தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க, ரசிகர்களுக்காக அதிகாலை ஸ்பெஷல் ஷோக்கள் பல மாநிலங்களிலும் திரையிடப்படுகின்றன.

 

ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகாலை ஸ்பெஷல் காட்சிகளுக்கு அனுமதி இல்லாத சூழலும் உள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்ற பெண் ஒருவர் பலியான சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் தெலுங்கானாவில் இனி எந்த படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் கிடையாது என அம்மாநில அமைச்சர் அறிவித்துள்ளார். இனி தெலுங்கானாவிலும் தமிழகத்தை போல காலை 9 மணிக்கே முதல் காட்சிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

 

 

இது அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய தெலுங்கு படங்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. அடுத்த மாதத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர், பாலகிருஷ்ணாவி Daaku Maharaaj ஆகிய படங்கள் சங்கராந்தியை முன்னிட்டு வெளியாக உள்ளன.

 

பெரும்பாலும் பெரிய படங்கள் வழக்கமான 4 ஷோக்கள் மட்டுமல்லாமல் சிறப்பு காட்சியையும் சேர்த்தே வசூல் நிலவரத்தில் முன்னணி வகிக்கின்றன. இதனால் அடுத்தடுத்து வரும் தெலுங்கு படங்களின் முதல் நாள் வசூல் சற்று குறையும். அதுமட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்து சிறப்பு காட்சிகளுக்கு பிறகு வரும் விமர்சனங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கருக்கு ஏற்கனவே இந்தியன் 2 சரியாக போகாத நிலையில், கேம் சேஞ்சருக்கு தெலுங்கானாவில் சிறப்பு காட்சிகள் கிடைக்காது என்பது பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் பேசிக்கொள்ளப்படுகிறது.

 

மேலும் பாலகிருஷ்ணாவுக்கு அதிக ரசிகர்கள் உள்ள தெலுங்கானாவில் சிறப்பு காட்சிகள் கிடையாது என்பது பாலய்யா ரசிகர்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்