என்னது கமல் ரசிகனா?... இரு உன்ன பாத்துக்குறேன் – லோகேஷை மிரட்டிய ரஜினிகாந்த்!

vinoth

வியாழன், 24 ஜூலை 2025 (14:41 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது சம்மந்தமாக லோகேஷ் அளித்த ஒரு நேர்காணலில் ரஜினிகாந்த் தன்னை ஜாலியாக மிரட்டிய சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில் “நான் ஒருமுறை ரஜினி சாரிடம் ‘நான் தீவிர கமல் ரசிகன்’ என்று சொன்னேன். அதைக் கேட்ட அவர் “இரு உன்ன கூலி படத்தோட இசை வெளியீட்டு விழாவுல பாத்துக்குறேன்’ என செல்லமாக மிரட்டினார்” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்