ஜேசன் சஞ்சய் படத்தில் இருந்து விஜய் விலகி இருக்கக் காரணம் என்ன?

vinoth

செவ்வாய், 3 டிசம்பர் 2024 (12:04 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பூஜையில் சஞ்சய்யின் தந்தை விஜய் கூட கலந்துகொள்ளவில்லை. அதன் பின்னர் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது படத்துக்கான நடிகர் நடிகைகள் தேடும் படலம் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும், தமன் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் சம்மந்தமாக விஜய் ஒரு வாழ்த்து ட்வீட் கூட போடவில்லை. இதுபற்றி பேசியுள்ள சினிமா பத்திரிக்கையாளர் அந்தனன் “சஞ்சய், தன் அப்பாவின் நிழல் இல்லாமல் தான் வளர்ந்துவர வேண்டும் என நினைக்கிறார். அதனால்தான் விஜய் இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்