மீண்டும் இணைந்த அனிருத்-சிவகார்த்திகேயன்: இம்முறை எந்த படத்திற்காக தெரியுமா?

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (18:39 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து உள்ளனர் என்பதும் அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தற்போது நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது
 
எடக்கு மடக்கு என்று தொடங்கும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளதாகவும் இந்த பாடலை ஆர் முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இயக்குனர்கள் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த தகவல் அனிருத் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்