சந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ படத்தின் டிரைலர் எப்போது?

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (20:10 IST)
காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம் ஹீரோவாக பதவி உயர்வு பெற்று பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்றும் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பல வெற்றி பெற்று வருகின்றன என்பதும் தெரிந்தது
 
இந்த நிலையில் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘பிஸ்கோத்’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பிஸ்கட் கம்பெனி வைத்திருக்கும் ஒருவர் வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது . சந்தானம் ஜோடியாக அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பல்லா ஆகிய இரண்டு நடிகைகள் நடித்திருக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், லொள்ளு சபா மாணவர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் மிக விரைவில் வெளியாக இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் கண்ணன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு. எனவே படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு எந்தநேரமும் வெளிவர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்