பெயருக்குப் பின்னால் சாதி அடையாளம் தேவையில்லை.. தனுஷ் பட நடிகையின் கருத்து!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:38 IST)
வாத்தி படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார் சம்யுக்தா.

வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் பரிச்சயம் ஆகியுள்ளார் சம்யுக்தா. இவர் ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் கூடுதல் கவனத்தை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் வாத்தி படம் பற்றி பேசியுள்ள சம்யுக்தா வாத்தி திரைப்படம் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசுகிறது. மேலும் தன் பெயருக்குப் பின்னால் மேனன் என்ற சாதி பெயர் குறித்து கூறிய அவர் “வாத்தி படத்தில் அந்த பெயர் இருக்காது. சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதியிலும் உடன்பாடு இல்லை. என்னை சம்யுக்தா என்று அழைத்தாலே போதும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்