அவளை விட்டு ஓடிடு இல்ல கொன்னுடுவேன் - ஐஸ்வர்யா ராய்யின் EX காதலன் மிரட்டல்!

சனி, 4 பிப்ரவரி 2023 (09:49 IST)
நடிகர் விவேக் ஓபராய்யை மிரட்டிய ஐஸ்வர்யா ராய்யின் முன்னாள் காதலன் சல்மான் கான்!
 
பாலிவுட் ஸ்டார் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இதற்கு முன்னர் அவர் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தது அனைவரும் தெரிந்த ஒன்றே. 
 
சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும் இந்திய சினிமாவின் ஸ்டார் ஜோடிகளாக சுற்றித் திரிந்தவர்கள். ஆனால் ஒருகட்டத்தில் சல்மான் கானின் டார்ச்சர் தாங்கமுடியாமல் ஐஸ்வர்யா ராய் அவரை பிரிந்துவிட்டார். பின்னர் பிரபல நடிகர் விவேக் ஓபராய்யை காதலித்து வந்தார். 
இதனால் கடுப்பான சல்மான் கான் நடிகர்  விவேக் ஓபராய்யை வீட்டிற்கு அழைத்து ஐஸ்வர்யா ராய்யை விட்டுவிடு இல்லையெனில் பாலிவுட்டில் உன்னை அடையாளமே தெரியாமல் செய்துவிடுவேன் என மிரட்டினாராம். இதனால் அந்த காதல் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்