போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி கடந்த பல மாதங்களாக தலைமறைவாக இருந்த நபர் ஒருவர், புஷ்பா 2 படம் பார்க்க வந்தபோது, போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் ஒரு பக்கம் ரூ.1500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அந்நிலையில், இன்னொரு பக்கம் கூட்ட நெரிசலில் இறந்த பெண் என பல்வேறு பிரச்சனைகளையும் அந்த படத்தின் குழுவினர் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்தை பார்க்க மும்பையில் உள்ள திரையரங்கிற்கு விஷால் மேஷ்ரம் வந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, திரையரங்கிற்கு வந்த போலீசார் முதலில் விஷால் மேஷ்ரம் வந்த காரை பஞ்சர் செய்த பின்னர், அதிரடியாக திரையரங்கில் நுழைந்தனர்.
படம் ஓடிக் கொண்டிருந்த போது, இன்னொரு பக்கம், போலீசார் விஷாலை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.