துணிவு படத்தில் சமுத்திரக்கனியின் வேடம்… புகைப்படத்தின் மூலம் வெளியான தகவல்!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (08:52 IST)
அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது துணிவு படப்பிடிப்பு தளத்தில் சமுத்துரக்கனி, இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் உடை அணிந்து காணப்படுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்