துணிவு பட டப்பிங் பணிகளை தொடங்கிய மஞ்சு வாரியர்!

திங்கள், 31 அக்டோபர் 2022 (09:20 IST)
நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் இப்போது டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதையடுத்து மஞ்சு வாரியர் படத்தின் தன் காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர, அது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்