குழந்தைப் பிறக்க போவதை அறிவித்த நட்சத்திர தம்பதி!

திங்கள், 14 நவம்பர் 2022 (14:23 IST)
சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஜான் கொக்கன்.

பல படங்களில் சில காட்சிகள் மட்டுமே வரும் வில்லன் வேடங்களில் நடித்தவர் ஜான் கொக்கன். அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது சார்பட்டா பரம்பரை திரைப்படம்தான். அந்த படத்தில் அவர் நடித்த வேம்புலி கதாபாத்திரம் பாராட்டுகளைக் குவித்தது.

தற்போது துணிவு படத்தில் அஜித்துடன் நடிக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘துணிவு படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறீர்களா’ என்று கேட்க ‘இல்லை நான் முதல் முறையாக பாசிட்டிவ் ரோலில் நடிக்கிறேன். படத்தின் செகண்ட் ஹீரோ போன்ற ரோல்’ எனக் கூறியுள்ளார். ஜான் கொக்கன் வீரம், பாகுபலி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

இவர் பிரபல நடிகையும் தொகுப்பாளினியுமான பூஜா ராமச்சந்திரனை சில ஆண்டுகளுக்கு முன்னர் மணந்துகொண்டார். பூஜாவும் அந்தகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது இவர்களுக்கு குழந்தை பிறக்கப்போவதை இருவரும் அறிவித்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்