பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், தமிழில் இருந்து ஏகப்பட்ட படங்களை ரீமேக் செய்து இந்தியில் தயாரித்துள்ளார். ஆனால் முதல் முறையாக அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் மூலமாக தமிழ் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
அதன் பின்னர் அஜித்தின் வலிமை, உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷம் மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்களை தயாரித்தார். இந்நிலையில் துணிவு படத்துக்குப் பின் அவர் தொடர்ந்து தமிழ் படங்களை தயாரிக்க போவதில்லை என்றும் மீண்டும் பாலிவுட்டுக்கே செல்ல போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.