சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என பேசிய தயாரிப்பாளருக்கு சமந்தா பதிலடி!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (09:26 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை சகுந்தலம் எனும் பெயரில் உருவாக்கினார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் தேவ் மோகன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். படம் நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான வசூலையே பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வெளியான சமந்தாவின் யசோதா திரைப்படமும் வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் சமந்தா குறித்து பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டிபாபு பேசுகையில் “சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. அவர் யசோதா மற்றும் சாகுந்தலம் பட ப்ரமோஷன்களில் கண்கலங்கி பேசி, வெற்றிப் படமாக்க முயற்சி செய்தார். ஆனால் எல்லா நேரமும் மலிவான உத்தி பலிக்காது.” எனப் பேசியிருந்தார்.

அவருக்குப் பதிலளித்துள்ள சமந்தா “காதில் ஏன் அதிக முடி முளைக்கிறது என கூகுளில் தேடினேன். அதற்கு ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதுதான் காரணம் என வந்தது. நான் யாரை சொல்கிறேன் என உங்களுக்கு தெரியும்” எனக் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்