வசூலில் திணறும் சல்மான் கானின் படம்.. 3 நாளில் இவ்வளவுதானா?

செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (07:31 IST)
தற்போது, கிசி கா கிசி கி பாய்  ஜான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை  பர்ஹாத் சம்ஜி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில், நடிகை பூஜா ஹெக்டே, ஷெஹ்னாஸ்க் கில், வெங்கடேஷ், பாலக் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம்  தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் பெரியளவில் வசூல் செய்ய முடியாமல் திணறுகிறது. முதல் மூன்று நாட்களில் இந்த படம் 60 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாம். விரைவில் இந்த படம் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்