விஜய்யின் கட்சி மாநாடு குறித்த கேள்விக்கு நக்கலாக பதில் சொன்ன SAC..!

vinoth
வியாழன், 17 அக்டோபர் 2024 (07:41 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் சில வாரங்களுக்கு முன்னர் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவரது கட்சியின் முதல் மாநாடு விரைவில் விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது.

ஆனால் அதற்குள் தமிழகத்தில் பருவமழை பெய்து  புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் கோட் படத்தை பார்க்க இயக்குனர் வெங்கட்பிரபுவோடு வந்த விஜய்யின் தந்தை, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரனை சுற்றிவளைத்த பத்திரிக்கையாளர்கள் ‘விஜய்யின் மாநாடு பற்றி உங்கள் கருத்து என்ன?” எனக் கேட்டனர்.

அதற்கு நக்கலாக பதிலளித்த எஸ் ஏ சி “இவருதான் மாநாடு படம் எடுத்தவர்.” என வெங்கட்பிரபுவை நோக்கிக் கைகாட்டிவிட்டு எஸ்கேப் ஆனார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும், அவர் தந்தைக்கும் சுமூகமான உறவில்லை என சொல்லப்படுகிறது. இதை எஸ் ஏ சி யே பல பேட்டிகளில் ஒப்புக்கொண்டும் உள்ளார். கட்சி ஆரம்பிப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்