ஹெச் வினோத் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுதானா?.. வெளியான தகவல்!

vinoth

புதன், 16 அக்டோபர் 2024 (14:53 IST)
கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங் தொடங்கி பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படம் போலீஸ் கதைக்களம் சம்மந்தப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் விஜய், ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்