வசூலில் முன்னணியில் இருக்கும் ருத்ர தாண்டவம்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (16:04 IST)
பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள ருத்ரதாண்டவம் திரைப்படம் வசூலில் முன்னிலையில் உள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படம் இன்று வெளியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஒரு சிலர் நல்ல வரவேற்பும் ஒரு சிலர் கலவையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது வசூல் ரீதியிலும் இன்றைய முதல் நாள் நல்ல வசூல் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

படத்துக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதரவு அதிகமாக உள்ளது. அதனால் வசூலிலும் முன்னிலையில் உள்ளது. முதல் வார இறுதியில் தமிழகம் முழுவதும் சுமார் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான திரைப்படம் மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்