ஹீரோ - ஹீரோயினாகும் ‘கபாலி’ நடிகர்கள்

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (16:30 IST)
கபாலி’ படத்தில் நடித்த விஸ்வநாத் – ரித்விகா இருவரும், புதிய படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.


 


பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘கபாலி’. இந்தப் படத்தில், சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் விஸ்வநாத். ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் பிரபலமான ரித்விகாவும் ‘கபாலி’யில் நடித்திருந்தார். இந்த இருவரும் சேர்ந்து, புதிய படமொன்றில் ஹீரோ – ஹீரோயினாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை, ஜேபிஆர் இயக்குகிறார்.

வேலை தேடி அலையும் இளைஞனாக விஸ்வநாத்தும், பிசினஸ்மேனின் மகளாக ரித்விகாவும் நடித்துள்ளனர். வேலையில்லாத இளைஞன் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள்தான் கதை என்றாலும், 20 நிமிடங்களுக்கு திகில் நிறைந்த காட்சிகள் இருக்கிறதாம். இயக்குனர் ஏ.வெங்கடேஷ், இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்