சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (15:48 IST)
அமெரிக்காவை சேர்ந்த இரண்டு பேர் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவை அவரது கிளினிக்கில் வைத்து மிரட்டியுள்ளனர்.


 

 
இதுகுறித்து திவ்யா கூறியதாவது:-
 
அமெரிக்காவை சேர்ந்த ஆண், பெண் மற்றும் இந்தியர் ஒருவர் என கிளினிக்கிற்கு வந்தனர். அவர்களது  நிறுவனத்தின் மல்டிவைட்டமின் மற்றும் கொழுப்புச்சத்தை குறைக்கும் மருந்துகளை பரிந்துரைக்குமாறு கூறினார்கள்.
 
அவர்கள் கொண்டு வந்த மருந்துகளால் பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் அவற்றை பரிந்துரைக்க மறுத்துவிட்டேன். எனக்கும் லஞ்சம் கொடுக்க முயன்றனர். மேலும் எங்களுக்கு இந்தியாவில் பல அரசியல்வாதிகளை தெரியும் என்று கூறினர். இந்தியாவுக்கே வந்து இந்தியர்களை தரக்குறைவாக பேசியது அதிர்ச்சி அளித்தது என்றார்.
 
அடுத்த கட்டுரையில்