திரையரங்கில் கோட்டை விட்டாலும், விருது விழாவில் கலக்கிய ராவணக் கோட்டம்!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (15:27 IST)
சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் சாந்தனுவால் இன்னும் ஒரு பேர்சொல்லும் வெற்றியைப் பெற முடியவில்லை. இந்நிலையில் தான் அவர் மத யானைக் கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ‘ராவண கோட்டம்’ படத்தில் நடித்தார். இந்த படத்துக்காக வித்தியாசமான முறையில் பப்ளிசிட்டி செய்யப்பட்டது. படத்துக்காக சாந்தணு 3 ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் ரிலீஸுக்குப் பிறகு வழக்கமாக சாந்தணு திரைப்படங்கள் எப்படி வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் இருக்குமோ அதே மாதிரி ஆனது. விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வந்த வேகத்தில் திரையரங்கை விட்டு வெளியேறியது.

இந்நிலையில் படக்குழுவினருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்தது. ராஜஸ்தானில் நடந்த ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதை வென்றுள்ளது. இதை சமூகவலைதளத்தில் அறிவித்துள்ள சாந்தணு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்