கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது கலந்துகொண்டு வரும் பூஜா ஹெக்டே சமூக ஊடகங்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். அதில் “எனக்கு இன்ஸ்டாகிராமில் 30 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். அதனால் என் படங்களுக்கு 30 மில்லியன் டிக்கெட் விற்றுவிடுமா என்றால், இல்லை. பல ஸ்டார்கள் குறைவான பாலோயர்களைக் கொண்டுள்ளார்கள். சமூக ஊடகங்கள் என்பவை உண்மையான உலகம் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.