விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவான லைகா திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக வந்தது. ஆனால் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக அவரின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவானது. இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை ஜூனில் அவர் தொடங்கவுள்ளார்.
ஆனால் பூரி ஜெகன்னாத்தின் சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் அவரோடு இணைந்து படம் பண்ணாதீர்கள் என்று விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறும் பதிவுகள் சமூகவலைதளங்களில் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் விஜய் சேதுபதி அளித்துள்ள விளக்கத்தில் “நான் என்னுடைய இயக்குனர்களை அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை வைத்து நான் தேர்வு செய்வதில்லை. ஒரு கதை எனக்குப் பிடித்திருந்தால், நான் அதில் நடிப்பேன். அப்படி அவர் சொன்ன ஆக்ஷன் கதை எனக்குப் பிடித்திருந்தது. இதுவரை நான் நடிக்காத ஒருக் கதைக்களம் இது. நான் முயற்சிக்காத கதைகளை நடிக்க ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.