நரைத்த முடியுடன் உள்ள நபர் தாலி கட்டினார்.. விஜய் டிவி பிரியங்காவின் 2வது திருமணம்..

Siva

வியாழன், 17 ஏப்ரல் 2025 (07:42 IST)
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா,  இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு நரைத்த முடியும் நரைத்த தாடியுடன் உள்ள நபர் தாலி கட்டிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
பிரியங்காவை திருமணம் செய்து கொண்டவரின் பெயர் வசி என்றும், அவர் ஒரு டிஜே என்றும் கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்த தகவல் தெரிந்ததும், பலரும் பிரியங்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த திருமண வீடியோவில், பிரியங்காவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. மேலும், வேறு யாருக்கும் திருமண தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
பிரியங்காவின் காலத்தில் வசி தாலி கட்டி முடித்தவுடன், எமோஷனலாக அவரை பார்க்கும் காட்சியும் இந்த வீடியோவில் உள்ளது. மேலும், பிரியங்காவின் நெற்றியில் வசி முத்தமிடும் காட்சியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த திருமண வீடியோவில், பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரரும் அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
பிரியங்கா, ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமாரை திருமணம் செய்திருந்தார். ஆறு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
 
இந்த நிலையில், தற்போது அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அடுத்து, இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்