விக்ரம் மற்றும் ஹரி படத்தின் கதாநாயகி இவர்தான் – கசிந்த ரகசியம்!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:12 IST)
விக்ரம்மை வைத்து ஹரி இயக்கவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ’சாமி ஸ்கொயர்’ என்ற திரைப்படம் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பின்னர் ஹரி இன்னும் வேற ஒரு படத்தை இயக்கவில்லை என்பது தெரிந்ததே. சூர்யா நடிப்பில் ’அருவா’ என்ற திரைப்படத்தை இயக்க ஹரி திட்டமிட்டு இருந்தார் என்பதும் ஆனால் அந்த படம் எதிர்பாராத விதமாக ட்ராப் ஆகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் அருண் விஜய் நடிப்பில் ஒரு படத்தை ஹரி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கும் ஒரு படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த படத்தின் கதாநாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே சூர்யா அருவா படத்தில் நடிக்க இருந்த போது அந்த படத்துக்காக ஹரியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதனால் இப்போது இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் கதை அருவா படத்தின் கதைதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்