ரஜினி படத்தின் பெயர் "நாற்காலி" முதல்வரா நடிக்கிறாரா?

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (14:57 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்ததாக நடிக்கும் படத்தின் பெயர் " நாற்காலி"


 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு "நாற்காலி" என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த  2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. 


 
பேட்ட படத்தோடு சினிமாவை ஓரங்கட்டிவிட்டு  முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என நினைத்தால் அதுதான் இல்லை. அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது.  இந்த படம் முருகதாஸின் கத்தி, சர்கார் படங்களை விட ஒரு படி மேலே சென்று அரசியல் பேச உள்ளதாம் . இதனை கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்நிலையில் தற்போது, இந்த படத்துக்கு " நாற்காலி "என்று பெயர் வைப்பதற்கான ஆலோசனைகள் நடப்பதாக கூறப்படுகிறது. முருகதாஸ் படம் என்றாலே சர்ச்சையான குறைவு இல்லாதவகையில் இருக்கும் ஆக "நாற்காலி" என்று தலைப்பு வைக்கும் பட்சத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். 
 
இதன் மூலம் படத்தில் ரஜினி முதல்வராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.ரஜினி இதுவரை எந்த படத்திலும் அரசியல்வாதியாக நடித்ததில்லை முதன்முறையாக முருகதாஸ் தான் களமிறக்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்