அதாவது, ரஜினியின் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 2.0 படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கல் மத்தியில் நல்ல வரவேறை பெற்றுள்ளது. மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் படத்தை பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஒரு படம் வெளியாகிய ஒரே மாதத்தில் இன்னொரு படத்தை வெளியிட வேண்டுமா என்ற எண்ணம் ரஜினிக்கு தோன்றியுள்ளதாம். எப்போதும் பெரிய ஸ்டார் படங்கள் அடுத்தடுத்து உடனே வெளியாகாது. அப்படி வெளியானால் ரசிகர்களுக்கு அந்த அளவு எதிர்ப்பார்ப்புகளும் இருக்காது.
ஏனெனில், படத்தை பொங்கலுக்கு வெளியிடும் நோக்கத்தில் படத்தின் பாடல் வெளியிடப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சிம்ரன், விஜய் சேதுபதி, த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேஹா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.