'பேட்ட' தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நடிகர்

சனி, 8 டிசம்பர் 2018 (09:05 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றூள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினி படத்தின் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெறுவது இதுவே முதல் முறை

இந்த நிலையில் நாளை 'பேட்ட' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்