ரஜினியின் அட்வைஸால் மீண்டும் நடந்த லால் சலாம் ஷூட்டிங்!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:59 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் புதுபடம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலையில் முதல்கட்ட ஷூட்டிங் தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இந்நிலையில் இப்போது ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் படமாக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த ரஜினிகாந்த் சில காட்சிகளை மட்டும் மீண்டும் படமாக்க சொல்லி இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு அறிவுறுத்த, ஒரு நாள் சென்னையில் ரஜினியை வைத்து ஷூட்டிங் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்