கடைசி நேர குளறுபடி… ஜெயிலர் படத்தின் விநியோகஸ்தர் மாற்றம்!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:56 IST)
ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது.

இந்த படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடு ஆகியவற்றிலும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் படங்கள் அதிகமாக ஓடும் மலேசியாவில் ஜெயிலர் திரைப்படத்தை மாலிக் பிலிம்ஸ் என்ற முன்னணி நிறுவனம் கைப்பற்றி இருந்தது.

ஆனால் இடையில் அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக அவர்களால் வெளியிடமுடியாமல் போகவே, இப்போது லோட்டஸ் பிலிம்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்தின் மூலமாக ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்