உதயநிதி இபாஸ் குறித்து எந்த ஊடகமாவது கேள்வி எழுப்பியதா? பாஜக பிரபலம்

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது மகள் குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் சென்று வந்தது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வைரலை பொறுக்க முடியாத சிலர் ரஜினிகாந்த் இபாஸ் பெற்றாரா? என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். 
 
ஒரு பிரபலம் இபாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் பிரச்சினை ஏற்படும் என்பது ரஜினிக்கு தெரியாதா? அவர் இபாஸ் இல்லாமல் எப்படி சென்று இருப்பார்? என்றா புரிந்துணர்வு இல்லாமல் ஒரு சிலர் வேண்டுமென்றே கேள்வி எழுப்பி வருவதாக ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்தானர்.
 
மேலும் இன்று அவர் மீட்னும் கேளம்பாக்கம் செல்வதற்கு இபாஸ் எடுத்து இருந்ததை சமூக வலைதளங்களில் பதிவு செய்து நான்கு நாட்கள் கழித்து இன்றைய இபாஸ் அவர் எடுத்துள்ளதாகவும் பொய்யான செய்தியை பரப்பி வருகின்றார்கள் இந்த நிலையில் பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:
 
உதயநிதி பயணம் செய்த போது 'அறம்' பற்றி வாயே திறக்காமல் கப்சிப் என அடங்கி/ஒடுங்கியவர்கள்; இப்ப ரஜினி என்றவுடன் மட்டும் கூடி கும்மியடிப்பது எந்த வகை "ஊடகவியல்" என்று தான் புரியவில்லை. தமிழக அரசு தரப்பும் உதயநிதியின் பாஸை choiceல் விட்டு, ரஜினி பாஸை உடனே வெளியிட்டதன் அர்த்தம் என்னவோ

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்