பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

vinoth

வியாழன், 2 ஜனவரி 2025 (15:11 IST)
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். அவர் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசேபூர், தேவ் டி உள்ளிட்ட படங்கள் பெரியளவில் கவனம் பெற்ற படைப்புகளாக அமைந்தன.

சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அதனால் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் விஜய்யின் லியோ படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். விரைவில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து பாலிவுட் படங்கள் மேல் விமர்சனம் வைத்து வரும் அனுராக் காஷ்யப் “நான் மும்பையில் இருந்து வெளியேறி தென்னிந்தியாவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளேன். பாலிவுட் சினிமாவில் நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். இங்கு யாருமே நடிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. எல்லோரும் ஸ்டார் ஆகவே விரும்புகிறார்கள். அவர்களின் மனநிலை வெறுப்பை ஏற்படுத்துகிறது.” எனக் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்