என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

Prasanth Karthick

வியாழன், 2 ஜனவரி 2025 (13:13 IST)

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவிருந்த விடாமுயற்சி தள்ளிப்போன நிலையில் அடுத்தடுத்து 9 படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதி செய்துள்ளன.

 

 

2025ம் ஆண்டு பொங்கலுக்கு தொடர்ந்து விடுமுறை இருப்பதால் அந்த காலக்கட்டத்தில் படத்தை ரிலீஸ் செய்ய பல தயாரிப்பு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. ஆனால் பாலாவின் வணங்கான், ராம்சரணின் கேம் சேஞ்சர், அஜித் நடித்துள்ள விடாமுயற்சி என பல பெரிய படங்கள் பொங்கல் ரேஸில் இருந்ததால் மற்ற படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக இருந்தன.

 

இந்நிலையில் நேற்று புத்தாண்டு அறிவிப்போடு, பொங்கலுக்கு படம் ரிலீஸாகாது என்ற அப்டேட்டையும் வெளியிட்டு விடாமுயற்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது லைகா நிறுவனம். அதை தொடர்ந்து தற்போது பல படங்கள் தங்கள் வெளியீட்டை பொங்கலுக்கு நகர்த்தியுள்ளன.

 

தற்போதை நிலவரப்படி 9 தமிழ் படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. அதன்படி, கேம் சேஞ்சர், வணங்கான், படைத்தலைவன், மெட்ராஸ்காரன், நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை, டென் ஹவர்ஸ், 2கே லவ் ஸ்டோரி, தருணம் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளன. இந்த பொங்கல் ரேஸில் மேலும் சில படங்களும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்