கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன்?

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:27 IST)
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன் என தகவல் வெளியாகி வருகிறது. 
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். 
 
அமிதாப் மட்டுமின்றி அவரது மகன் அபிஷேக் பச்சனும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் தற்போது அமிதாப் பச்சன் கொரோனாபில் இருந்து மீண்டு வீடு திரும்ப உள்ளார் என செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவ துவங்கியுள்ளது. 
 
ஆனால் இது பொய்யான தகவல் என அமிதாப் பச்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவை போட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்