மீண்டும் அஜித்துடன் மோத விரும்பாத ரஜினிகாந்த்!

Webdunia
புதன், 1 ஜனவரி 2020 (08:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. இருப்பினும் பேட்ட படத்தின் வசூலை விஸ்வாசம் வசூல் முறியடித்ததாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படமும் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படமும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மீண்டும் அஜித்துடன் மோத விரும்பாத ரஜினிகாந்த், ‘தலைவர் 168’ திரைப்படத்தை முன்கூட்டியே வெளியிட ஆலோசனை கூறியதாகவும் இதனையடுத்து இந்த படம் இந்த ஆண்டு ஆயுத பூஜை தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே மீண்டும் தலைவர் மற்றும் தல படங்கள் மோத வாய்ப்பில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்