சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மாஸ் நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட’, தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக விஜய்சேதுபதி படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சன் பிக்சர்ஸ், விஜய் சேதுபதி மற்றும் பொன்ராம் இணையும் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது