அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

Prasanth Karthick

வெள்ளி, 21 மார்ச் 2025 (11:05 IST)

சமீபமாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி வரும் பாடல்களில் தமிழ் பாட்டு போலவே இருக்கும் தாய்லாந்து பாடல் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

 

இன்ஸ்டாகிராமின் புழக்கத்தால் சமீபமாக தமிழ் தாண்டிய பிற மொழியின் பலரும் அறிந்திடாத பாடல்கள் கூட தமிழகத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக ஒடிசா பாடலான ‘ச்சீ ச்சீ ச்சீ ச்சின்” என்ற பாடல் இளைஞர்களிடையே செம வைரலாக இருந்தது.

 

அதை தொடர்ந்து இப்போது தாய்லாந்து நாட்டு பாடலான “Anan Ta Pad Chaye” என்ற பாடல் வைரலாகி வருகிறது. இந்த பாடலின் வரிகள் “அண்ணன பாத்தியா அப்பாட்ட கேட்டியா..” என தமிழில் பாடுவது போலவே உள்ளதால் தமிழ்நாட்டில் இந்த பாடல் வெகு வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.

 

இந்த பாடலின் வரிகள் முதலில் தாய்லாந்து ஆல்பம் பாடல் ஒன்றில் இடம் பெற்றுள்ளது. அது அப்போதே தாய்லாந்தில் பிரபலம். அதை தொடர்ந்து தாய்லாந்தில் பிரபலமான படமான ‘தி ஹோலி மேன் 3’ என்ற படத்தில் இந்த பாடல் வரிகளை ஒரு நகைச்சுவை காட்சியில் பயன்படுத்தியுள்ளார்கள்.

 

சமீபத்தில் நிகின் சாலிண்ட்ரி (Niken Salindri) என்ற தாய்லாந்து பாடகி நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலை பாடியிருந்த நிலையில் அது சமூக வலைதளங்கள் மூலமாக பரவி தற்போது இந்த பெரிய ட்ரெண்டை வந்தடைந்துள்ளது. இந்த ட்ரெண்டிங்கை வைத்து பாடகி நிகின் சாலிண்ட்ரிக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டார்களாம்.

 

Edit by Prasanth.K

 

 

 

 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்