விஜய்யின் ‘மாஸ்டருக்கு முந்தைய மாஸ்டர்கள் யார் யார்?

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (21:31 IST)
தளபதி விஜய் நடித்த 64 படத்தின் டைட்டில் 'மாஸ்டர்' என்பதை சற்றுமுன்னர் பார்த்தோம். விஜய்க்கு ஏற்ற மாஸ் டைட்டிலான இந்த படத்தின் டைட்டிலை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இதற்கு முன்பே 'மாஸ்டர்' என்ற டைட்டில் மூன்று திரைப்படங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 1997ம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த தெலுங்கு படம் ஒன்றுக்கு 'மாஸ்டர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் தமிழ் நடிகர் சசிகுமார் நடித்த திரைப்படத்திற்கும் ’மாஸ்டர்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
அதுமட்டுமன்றி அதே 2012 ஆம் ஆண்டில் ஆங்கில படம் ஒன்றும் ‘தி மாஸ்டர்’  என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட மூன்று திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு உள்ளது என்பதும் அதே போல் விஜய் விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் நல்ல வசூலை கொடுக்க வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்