டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

vinoth

வெள்ளி, 21 மார்ச் 2025 (09:35 IST)
ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக அறிமுகமானார் அஷ்வத் மாரிமுத்து. அதன் பின்னர் அதே படத்தை அவர் மீண்டும் தெலுங்கில் இயக்கினார். அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து தற்போது டிராகன் என்ற படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட்டைக் கொடுத்துள்ளார்.

இதனால் முன்னணி நடிகர்களால் விரும்பப்படும் இயக்குனராக மாறியுள்ளார். அடுத்து சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அஷ்வத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் சிம்பு படத்துக்குப் பிறகு தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த படத்தை தெலுங்கின் பிரபல நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்