சிரஞ்சீவியுடன் இணைந்த சூப்பர் ஸ்டார்ஸ் – சைரா படத்துக்கு டப்பிங் பேசும் ரஜினி !

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (08:38 IST)
சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி படத்திற்காக ரஜினி டப்பிங் பேச இருக்கிறார்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சைரா நரசிம்ம ரெட்டி எனும் வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப்படத்தில் அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, கஜபதி பாபு, நயன்தாரா, தமனா மற்றும் அனுஷ்கா என இந்தியாவின் முக்கிய நடிகர்கள் அனைவரும் நடித்துள்ளனர். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் தயாராகி வருகிறது.  இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தொடக்கத்தில் இந்தக் கதையைப் பற்றிய வாய்ஸ் ஓவர் பகுதி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் பேசுவதற்காக அந்தந்த மொழிகளின் சூப்பர் ஸ்டார்களிடம் பேசி வருகின்றனர். தெலுங்கில் பவன் கல்யாணிடமும், மலையாளத்தில் மோகன்லாலிடமும், பாலிவுட்டில் ஹிரித்திக் ரோஷனிடம் இது சம்மந்தமாகப் பேசியுள்ளனர். தமிழில் குரல் கொடுக்க ரஜினியிடம் படக்குழு பேசி வருவதாக தெரிகிறது. ரஜினியும் சிரஞ்சீவியும் நீண்டநாள் நண்பர்கள் என்பதால் இதற்கு ரஜினி ஒத்துக்கொள்வார் என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்