கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு இந்த வேடம்....

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (13:55 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் புதிய படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது.

 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. 
 
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டோராடூனில் நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது. ஒரு வாரம் ஓய்வெடுத்த ரஜினி தற்போது உத்தரகாண்டில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
 
இதற்கிடையே, அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என்கிற தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த படத்தில் ரஜினி ஒரு கண்டிப்பான விடுதி காப்பாளராக நடிக்கிறாராம். பாபி சிம்ஹா மற்றும் சனந்த் ரெட்டி ஆகியோர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்களாம். ஹாஸ்டல் வார்டன் கதாபாத்திரத்தில் ரஜினி மிரட்டலாக நடித்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்