காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசோ சாலை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்த ரஜினி “இந்த திட்டம் செயல்படுத்த வேண்டிய ஒரு நல்ல திட்டம். வளர்ச்சிகளை கொண்டு வந்தால் தான் நாடு முன்னேற முடியும். ஆனால் அதே வேளையில் இதனால் பாதிக்கப்படும் மக்களை திருப்திபடுத்தும் வகையில் அவர்களுக்கு பணமோ இடமோ கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. முடிந்த அளவுக்கு விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதிக்காமல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நல்லது என ரஜினிகாந்த தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினி கூறியது பற்றி அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “எட்டு வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால் இனி இது சூப்பர் வழி சாலை என தெரிவித்தார்.