எம்புரான் படத்தில் பிருத்விராஜின் கதாபாத்திர லுக்கை வெளியிட்ட பிரித்விராஜ்!

vinoth
புதன், 16 அக்டோபர் 2024 (14:48 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதற்கு முன்பாக மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் ஏற்கனவே பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாவதாக இருந்த எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த படம் முதல் பாகத்தில் நண்பர்களாக இருக்கும் பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் ஆகியோர் எப்படி இணைந்தார்கள் என்பதை சொல்லும் முன்கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தில் சையித் மசூத் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிருத்விராஜின் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்