அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

Siva

செவ்வாய், 8 ஜூலை 2025 (18:19 IST)
நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்களை வெளியிடுவதாகக் கூறி, சில யூடியூப் சேனல்கள் தொடர்ச்சியாக தவறான செய்திகளை பரப்பி வந்த நிலையில், இந்த படத்தை தயாரிக்க இருக்கும் தயாரிப்பு நிறுவனம் அதற்கு பதிலடி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அஜித்தின் அடுத்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்று அஜித் கூறியதாகவும், நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், இப்போதே ஏன் அறிவிப்பு என்று அவர் தெரிவித்ததாகவும், அதனால்தான் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் யூடியூபில் சிலர் கூறி வருகின்றனர். 
 
மேலும், அஜித் அடுத்த படத்தின் மீது மெத்தனமாக இருப்பதாகவும், தற்போது கார் பந்தயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், அஜித் தனது ரசிகர்களை கண்டுகொள்வதே இல்லை என்றும் சிலர் விமர்சித்து வந்தனர்.
 
ஆனால், அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கும் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்றும், சரியான நேரத்தில் அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள், நட்சத்திரங்கள் தேர்வு, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு ஆகியவை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்