மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வியக்க வைக்கும் சுந்தர் சி!

vinoth

சனி, 12 அக்டோபர் 2024 (18:30 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு மாசானி அம்மன் என பெயர் வைத்து வேலையை ஆரம்பித்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கவில்லை என சொல்லப்பட்டது.

இதற்கிடையில் பாலாஜிக்கு போட்டியாக வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 வை எடுக்க உள்ளதாக திடீர் அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. பின்னர் அந்த படத்தின் இயக்குனராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது. இந்த படத்தை சுமார் 55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சுந்தர் சி தயாரித்து இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்