லியோ திரைப்படத்தின் பிரிமியர் காட்சிகள் ரத்து! – ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (08:52 IST)
அமெரிக்காவில் லியோ படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து 19ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம்  லியோ. தமிழ் மட்டுமின்றி  பல பிற மொழிகளிலும்  வெளியாகிறது. மேலும், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் வெளிநாடுகளில் தொடங்கிவிட்டது.

விஜய்க்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ள இங்கிலாந்து. அமெரிக்கா  போன்ற நாடுகளில் ஒரு மாதம் முன்பே லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்துவிட்டது . மேலும் வரும் வியாழக்கிழமை படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் அமெரிக்காவில் லியோ படத்தின் பிரிமியர் காட்சிகள் ரத்து செய்துள்ளார்கள்.

லியோ படத்தை அனுப்புவதற்கு காலதாமதம் ஆனதால்  திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டிருந்த பிரிமியர் காட்சிகள் ரத்து செய்துள்ளனர். பிரீமியர் காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பும் வேலையில் இறங்கியுள்ளனர். ஐமேக்ஸ் இல்லாத தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு சென்னை மற்றும் தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடங்கிய ஒரு சில மணி நேரத்தில் லியோ படத்தின் டிக்கெட் கள் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்