லியோவில் முதல் 10 நிமிடங்களை தவற விடாதீங்க! – ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கோரிக்கை!

சனி, 14 அக்டோபர் 2023 (11:00 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள லியோ படம் ரிலீஸாக உள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு முக்கியமான கோரிக்கையை விடுத்துள்ளார்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து லியோ படம்தான் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேச்சாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிட்டு விடாதீர்கள். எப்படியாவது படம் போடுவதற்கு முன்பு தியேட்டர் சென்றுவிடுங்கள். பார்வையாளர்களுக்கு அது ட்ரீட்டாக அமையும். அந்த 10 நிமிடங்களுக்காக ஒரு ஆண்டு காலமாக 1000க்கும் மேற்பட்டோர் உழைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இதனால் அந்த 10 நிமிட காட்சி என்னவாக இருக்கும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்