அர்ஜுனின் நடிப்பைப் பார்த்து மிரண்டு பரிசுகொடுத்த லோகேஷ்!

சனி, 14 அக்டோபர் 2023 (15:11 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

இரும்புத்திரை படத்துக்குப் பிறகு இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் அர்ஜுன். விஜய்க்கும் இவருக்கும் படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சி ரசிகர்களால் விதந்தோதப்படும் என இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அர்ஜுனின் நடிப்பைப் பார்த்து மிரண்ட லோகேஷ், தன்னுடைய விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அர்ஜுனுக்கு பரிசாக அளித்துள்ளாராம். மேலும் தான் அடுத்து இயக்கும் ‘தலைவர் 171 ‘ படத்திலும் அர்ஜுனுக்கு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்