தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'டிராகன்' திரைப்படம், தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் ரீமேக் உரிமைகளை, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜியோ ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது.
'டிராகன்' திரைப்படம், தமிழில் வெளியானபோது அதன் தனித்துவமான கதைக்களம், நகைச்சுவை மற்றும் காட்சி அமைப்புக்காக பரவலாக பாராட்டப்பட்டது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ், இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இந்த இரண்டு பெரிய நிறுவனங்களும் கைகோத்திருப்பது, 'டிராகன்' ரீமேக் படத்திற்கு ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை உறுதி செய்வதாக உள்ளது.