சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். மேலும் சிலர் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில நாட்களாகவே முழு நேரத்தையும் தனது மனைவி மற்றும் குழந்தைளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது பண்ணை வீட்டில் அறுவடை செய்த காய்கறி , பழங்கள் குறித்து பதிவிட்டு வந்தார். இதற்கிடையில் ஏழை எளிய மக்களுக்கு சமைப்பதற்கு தேவையான பொருட்களை டெம்போவில் கொண்டு சென்று வழங்கினார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டரில் சூரியன் மறையும் பொழுதில் என் மகனுடன். மேலும் என் மனைவியும் மகளும் செய்த பீட்சாவை மகிழ்ந்து சாப்பிடுகிறோம். இந்த லாக்டவுனில் மகிழ்வான தருணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Basking in the sunset with my son.. and relishing pizzas made by my darling wife n daughter in the farm.... quality time in lockdown... make out the best of life ..