பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் ப்ரதீப் ரங்கநாதன் கவனிக்கப்படும் ஹீரோவானார்.
இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் அவரை நோக்கி அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர் தன்னுடைய சம்பளத்தை 18 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம். இதுவரை நடிகராக ஒரு ஹிட் மட்டுமே கொடுத்துவிட்டு முன்னணி நடிகர்கள் பலரின் சம்பளத்தை விட அதிகமாக வாங்குகிறார் என்பது கோலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.